2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

றியோ ஒலிம்பிக்: 4 x400 அஞ்சலோட்டத்தில் அமெரிக்காவுக்கு இரட்டை வேட்டை

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில், ஆண்கள் பிரிவிலும் பெண்கள் பிரிவிலும் தங்கம் வென்ற அமெரிக்கா, இரட்டை வேட்டை நிகழ்த்தியது.

முதலில் இடம்பெற்ற பெண்களுக்கான அஞ்சலோட்டத்தில், 3:19:06 என்ற நேரத்தில் தனது தூரத்தை நிறைவுசெய்த அமெரிக்க அணி, தங்கத்தை வென்றது. அவ்வணியின் முதலாவது வீராங்கனையான கோர்ட்னி ஒகோலோ வழங்கிய மிகச்சிறப்பான ஆரம்பத்தைப் பயன்படுத்திய அவ்வணி, சிறந்த முன்னிலையுடன் ஓட்டத்தை வெளிப்படுத்தியது.
வெள்ளிப் பதக்கத்தை ஜமைக்காவும் (3:20:34), வெண்கலத்தை பெரிய பிரித்தானியாவும் (3:25:88) பெற்றுக் கொண்டன. இதில், அமெரிக்க அணியும் ஜமைக்க அணியும், இந்தப் பருவகாலத்தில் தமது சிறப்பான பெறுபேறுகளையும் இதன்போது பதிவுசெய்திருந்தன.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆண்களுக்கான அஞ்சலோட்டத்தில், 2:57:30 என்ற நேரப்பெறுதியில் தமது தூரத்தை நிறைவுசெய்த அமெரிக்க அணி, தங்கத்தைத் தமதாக்கியது. ஜமைக்க அணி (2:58:16) இரண்டாமிடத்தையும் பஹாமாஸ் அணி (2:58:49) மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.

இதில், முதல் மூன்று இடங்களையும் பெற்ற அணிகளும், இந்தப் பருவகாலத்தில் தமது சிறப்பான பெறுபேறுகளை, இதன்போது பதிவுசெய்தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .