Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளவுள்ள பிரித்தானியாவின் சைக்கிளோட்டத் தங்க ஜோடியான லோரா ட்ரோட், ஜேஸன் கென்னி ஆகியோர் சாதனை ரீதியிலான தங்கப் பதக்கங்களை றியோ ஒலிம்பிக் சைக்கிளோட்டப் போட்டிகளில் வென்றுள்ளனர்.
2012ஆம் ஆண்டு தான் தங்கம் வென்ற வெவ்வேறு வகைகளை உள்ளடக்கிய சைக்கிளோட்டப் பாதை நிகழ்வில் இம்முறையும் 24 வயதான லோரா ட்ரோட் தங்கம் வென்றதன் மூலம், நான்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற முதலாவது பிரித்தானியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ட்ரோட், 2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக்கில் இரண்டு தங்கமும் தற்போது றியோவில் இரண்டு தங்கமும் பெற்றுள்ளார்.
மறுபக்கம், ஒலிம்பிக் சைக்கிளோட்டத்தில் தனது ஆறாவது தங்கத்தைப் பெற்ற 28 வயதான ஜேஸன் கென்னி, ஆறு ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற கிறிஸ் ஹோயின் சாதனையை சமப்படுத்தினார். 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கமொன்றையும் 2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக்கில் மூன்று தங்கமும் தற்போது, றியோவில் மூன்று தங்கமும் பெற்றுள்ளார்.
ட்ரோட்டும் கென்னியும் இணைந்து 10 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago