2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

றியோ ஒலிம்பிக்: 87 நாடுகளுக்குப் பதக்கம்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 22 , பி.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை றியோ ஒலிம்பிக் போட்டிகளில், 207 "நாடுகள்" (சுயாதீன அணி, அகதிகள் அணி உட்பட) பங்குகொண்டன. 46 தங்கங்கள், 37 வெள்ளிகள், 37 வெண்கலங்களைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய அமெரிக்கா, 121 பதக்கங்களைப் பெற்று, முதலிடத்தை இலகுவாகப் பெற்றுக் கொடுத்தது.

இரண்டாவது இடத்துக்கு பெரிய பிரித்தானியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவிய போதிலும், பெரிய பிரித்தானிய அணிக்கு, இரண்டாவது இடம் கிடைத்தது.

இதில், 59 நாடுகளுக்கு ஒரு தங்கப் பதக்கமாவது கிடைக்க, 87 நாடுகளுக்கு, ஏதாவதொரு பதக்கம் கிடைத்திருந்தது. 120 நாடுகளுக்கு, எந்தவொரு பதக்கமும் கிடைத்திருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .