Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்று வரும் றியோ ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில், 2012ஆம் இலண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற கென்யாவின் டேவிட் ருடிஷா தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம், 1964ஆம் ஆண்டு நியூஸிலாந்தின் பீற்றர் ஸ்னெல், ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கத்தை தக்க வைத்த பின்னர், தற்போது ருடிஷா தங்கப் பதக்கத்தை தொடர்ச்சியாக இரண்டாவது தடவை தக்க வைத்துள்ளார்.
சக நாட்டவரான அல்ஃபிரட் கிப்கெட்டர் முதலாவது சுற்றில் முன்னிலை பெற்றிருந்தாலும், முடிவிடத்துக்கு 300 மீற்றர் இருக்கையில் முன்னிலை பெற்ற 27 வயதான ருடிஷா தங்கம் வென்றார். போட்டித் தூரத்தை ஒரு நிம்டம் 42.15 செக்கன்களில் ருடிஷா கடந்திருந்தார்.
போட்டித் தூரத்தை ஒரு நிமிடம் 42.61 செக்கன்களில் கடந்த அல்ஜீரியாவின் தௌபீக் மக்ஹலௌஃபி வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், ஒரு நிமிடம் 42.93 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த ஐக்கிய அமெரிக்காவின் கிளைடன் மேர்பி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
34 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago