Shanmugan Murugavel / 2016 ஜூன் 23 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊக்கமருந்துக்கெதிரான விதிகளை மீறியமையின் காரணமாக ரஷ்யாவினதும் கஸக்ஸ்தானினதும் பெலாரஸினதும் பளுதூக்கல் அணிகள், இன்னுஞ்சில வாரங்களில் ஆரம்பிக்கவுள்ள றியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தடை விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
2008ஆம், 2012ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், ஊக்கமருந்துச் சோதனைக்காகப் பெறப்பட்ட மாதிரிகளை மீளவும் சோதனைக்கு உள்ளாக்கியமையின் காரணமாகவே, இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த அணிகளுக்கு, ஓர் ஆண்டுக்குத் தடை விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதோடு, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவினால் அந்தத் தடை ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன், ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தடை விதிக்கப்படும்.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட சர்வதேச பளுதூக்கல் சம்மேளனம், 'தவறு செய்யாத வீரர்கள் மாத்திரமே, போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தது.
இந்த அறிவிப்பு, இதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் போது, 2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளில், கஸக்ஸ்தானைச் சேர்ந்த பளுதூக்கல் வீரர்கள் நான்கு பேர், ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
58 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
7 hours ago