Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 22 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலின் றியோ டீ ஜெனீரோவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், நடுவர்களின் தீர்ப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டு, தமது ஆடைகளைக் களைந்த இரண்டு பயிற்றுநர்களுக்கு, மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மொங்கோலியாவைச் சேர்ந்த செரேன்பாட்டர் சொக்பயார், பியாம்பரின்சென் பயரா ஆகிய இரண்டு பயிற்றுநர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மொங்கோலியாவைச் சேர்ந்த கன்ஸொரிஜின் மண்டக்னாரனுக்கும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த இக்தியோர் நவ்ருஸொவுக்கும் இடையில் இடம்பெற்ற வெண்கலத்துக்கான குத்துச்சண்டைப் போட்டியில், மண்டக்னாரன், 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்துக் கொண்டிருந்தார்.
ஆனால், அவ்வாறு முன்னிலை வகித்துக் கொண்டிருக்கும் போது, தனது வெற்றியைக் கொண்டாடிய அவர், இறுதி 18 செக்கன்களுக்கு, தனது போட்டியாளரைச் சுற்றி நடனமாடிக் கொண்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, சண்டையில் ஈடுபடாத காரணத்தால், அவருக்குப் புள்ளிகளைக் குறைத்த நடுவர், அதன் மூலமாக அவரது போட்டியாளருக்கு வெற்றியை வழங்கினர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, மேற்படி பயிற்றுநர்கள் இருவரும், தமது ஆடைகளைக் களைந்து, சண்டையிடும் இடத்துக்குச் சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதையடுத்தே, இணைந்த உலகக் குத்துச் சண்டை அமைப்பால், சர்வதேசப் போட்டிகள் அனைத்திலிருந்தும், ஓகஸ்ட் 2019 வரை தடைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago