2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

றோய், வில்லிக்கு அபராதம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 27 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில், கிரிக்கெட் விதிமுறைகளை மீறிமைக்காக, இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர் ஜேஸன் றோய், அவ்வணியின் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜேஸன் றோய், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளரான ஜெப்றி வன்டர்சேயின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக நடுவரால் தீர்ப்பு வழங்கப்பட்டபொது, அதற்கெதிராக அவர் சைகைகளை வெளிப்படுத்தியதோடு, மைதானத்தை விட்டு வெளியேறும் போது, தனது துடுப்பையும் தலைக்கவசத்தையும் நிலத்தில் எறிந்திருந்தார். நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தமைக்காக, அவரது போட்டி ஊதியத்தின் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதேவேளை, வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி, இலங்கையின் மிலிந்த சிரிவர்தனவை ஆட்டமிழப்புச் செய்த பின்னர், மைதானத்தை விட்டு வெளியேறும்படி சமிக்ஞை செய்தமைக்காக, அவரது போட்டி ஊதியத்தின் 15 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .