Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகாத் தொடரின் கடந்த சனிக்கிழமை (09) இடம்பெற்ற போட்டிகளில் றியல் மட்ரிட் அணி வெற்றி பெற்றுள்ளதோடு, பார்சிலோனா அணி தோல்வியடைந்தது.
றியல் மட்ரிட், ஐபார் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 4-0 என்ற கோல்கணக்கில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றது. இப்போட்டியில் றியல் மட்ரிட் சார்பாக ஜேம்ஸ் ரொட்ரிகாஸ், லூகாஸ் வாக்கீஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜெஸி ஆகியோர் போட்டியின் 5ஆவது, 18ஆவது, 19ஆவது, 39ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்றனர். இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் லா லிகா புள்ளிகள் தரவரிசையில், 72 புள்ளிகளுடன் றியல் மட்ரிட் மூன்றாமிடத்தில் இருக்கின்றது.
இப்போட்டியில் பெற்ற கோலின் மூலம் தொடர்ச்சியாக ஆறாவது பருவகாலமாக லா லிகாவில் 30 கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.
இதேவேளை, றியல் சொஸைடட், பார்சிலோனா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா அதிர்ச்சி தோல்வியுற்றுள்ளது. 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் றியல் சொஸைடட்டை அவ்வணியின் மைதானத்தில் பார்சிலோனா வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் தோல்வியடைந்தாலும் 76 புள்ளிகளுடன் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் பார்சிலோனா முதலிடத்தில் உள்ளது.
11 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
40 minute ago
1 hours ago