2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

றக்பி உலகக் கிண்ணம்: நமீபியாவை வென்றது டொங்கா

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

றக்பி உலகக் கிண்ணத்தில் குழு 'சி"க்கான போட்டிகளில், நமீபியாவை எதிர்கொண்ட டொங்கா அணி, ஓரளவு இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

ஆரம்பத்திலிருந்தே முன்னிலை வகித்த டொங்கா, முதல் 12 புள்ளிகளையும் பெறும் போது, நமீபியாவுக்குப் புள்ளிகள் எவையும் காணப்பட்டிருக்கவில்லை. இறுதியில், 22-7 என்ற புள்ளிகள் கணக்கில் முதற்பாதி நிறைவடைந்தது.

இரண்டாவது பாதியிலும் தொடர்ந்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டொங்கா, புள்ளிகளைத் தொடர்ந்தும் பெற்றதோடு, நமீபிய அணி புள்ளிகளைப் பெறுவதையும் தடுத்தது. இறுதியில், 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் அவ்வணி வெற்றிபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .