Shanmugan Murugavel / 2021 மே 16 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் முகாமையாளரான ஸினடி ஸிடான், நடப்பு பருவகால முடிவில் கழகத்திலிருந்து வெளியேறப் போவதாக தனது குழாமுக்குத் தெரிவித்துள்ளாரெனக் கூறப்படுகிறது.
றியல் மட்ரிட்டினுடனான் ஸிடானுடனான ஒப்பந்தமானது அடுத்தாண்டு வரையில் காணப்படுகின்ற நிலையில், “நீங்கள் இருக்க வேண்டிய மற்றும் நீங்கள் போக வேண்டிய தருணங்கள் காணப்படுகின்றன” என ஸிடான் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஸிடான் விலகுவாராயின், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான எவெர்ற்றனின் முகாமையாளரான கார்லோ அன்சிலோட்டி, இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் முன்னாள் முகாமையாளரான மஸிமில்லியானோ அல்லெக்ரி ஆகியோர் அவரைப் பிரதியிடுவதற்கு கருதப்படுகின்றனர்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026