2025 ஜூலை 19, சனிக்கிழமை

றோகித் 208*; இந்தியா 392/4

Editorial   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இன்று (13) நடைபெற்ற இரண்டாவது போட்டியில், இந்திய அணியின் தற்காலிகத் தலைவரான றோகித் ஷர்மா, இரட்டைச் சதம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

மொஹாலியில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா,  50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 392 ஓட்டங்களைப் பெற்றது. அதிரடியாக விளையாடிய றோகித் ஷர்மா,, 153 பந்துளில் ஆட்டமிழக்காது 208 ஓட்டங்களைப் பெற்றார்.  றோகித் தவிர, ஷ்ரேயாஸ் ஐயர் 88 (70), ஷீகர் தவான் 68 (67) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் திஸர பெரேரா, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போதிலும், 8 ஓவர்களில் 80 ஓட்டங்களை வாரி வழங்கினார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், றோகித் ஷர்மா பெறும் 3ஆவது இரட்டைச் சதம் இதுவாகும்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X