2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

லென்டில் சிமன்ஸ் இல்லை: அன்ட்ரே றசல் விளையாடுவார்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 06 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இருபதுக்கு-20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமிலிருந்து, அவ்வணியின் துடுப்பாட்ட வீரர் லென்டில் சிமன்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள முதுகு உபாதை காரணமாகவே அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

எனினும் லென்டில் சிமன்ஸூக்குப் பதிலாக யாரைச் சேர்ப்பது என்பது குறித்து, தேர்வாளர்களுக்கிடையில் இன்னும் கருத்தொற்றுமை ஏற்படவில்லையென அறிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய சகலதுறை வீரர் டுவைன் ஸ்மித், இதில் தெரிவாகக்கூடிய அதிக வாய்ப்புகளைக் கொண்ட வீரராகக் காணப்படுகின்ற போதிலும், மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள ஜொனதன் கார்ட்டர், தெரிவாகக்கூடிய வாய்ப்புகளுள்ள மற்றொரு வீரராகக் கருதப்படுகிறார்.

இதேவேளை, ஊக்கமருந்துச் சோதனைகள் மூன்றைத் தவறவிட்ட மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை வீரரான அன்ட்ரே றசல், உலக இருபதுக்கு-20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் சேர்க்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊக்கமருந்துச் சோதனைகள் மூன்றைத் தவறவிட்டால், ஒருவர் ஊக்கமருந்துச் சோதனையில் தோல்வியடைந்ததாகவே கருதப்படும் என்ற நிலையில், இத்தொடரில் அவர் பங்குபற்றுவாரா என்ற சந்தேகம் காணப்பட்டது. எனினும், அவர் மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை, தொடர்ந்தும் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு, றசலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .