Shanmugan Murugavel / 2016 ஜூன் 23 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து அணியின் முன்கள வீரரும் ஆர்சனல் அணியின் இலக்குமான ஜேமி வார்டி, பிறீமியர் லீக் சம்பியன்களான லெய்செஸ்டருடன் புதிய ஒப்பந்தத்துக்கு இணங்கியுள்ளார்.
கடந்த பருவகாலத்தில் அதிர்ச்சிகரமாக, பிறீமியர் லீக் பட்டத்தை லெய்செஸ்டர் வெல்வதற்கு, வார்டியின் கோல்கள் உதவியதாகத் தெரிவித்த லெய்செஸ்டர், வார்டியுடன் நீடிக்கப்பட்ட நான்கு வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதாக தெரிவித்துள்ளது.
மேற்படி அறிவிப்பின் காரணமாக, ஜேமியின் எதிர்காலம் தொடர்பில் அண்மையில் நிலவிய ஊகம் முடிவுக்கு வரும் என இரண்டு தரப்புகளும் நம்புவதாக லெய்செஸ்டரின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
யூரோ 2016 கிண்ணம் ஆரம்பிக்க முன்னர், வார்டியுடன் வாரோமொன்றுக்கு 120,000 ஸ்டேர்லிங் பவுண்ஸ்கள் பெறுமதியான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஆர்சனல் எதிர்பார்த்திருந்த நிலையில், அது தோல்வியில் முடிவடைந்திருந்தது.
வேல்ஸ் அணிக்கெதிரான இங்கிலாந்தின் குழு பி போட்டியில் மாற்று வீரராக களமிறங்கிய வார்டி. கோலோன்றினைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
57 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
7 hours ago