Shanmugan Murugavel / 2016 மார்ச் 21 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற போட்டிகளில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றதோடு, பார்சிலோனா, வில்லாறியல் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
றியல் மட்ரிட், செவில்லா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-0 என்ற கோல்கணக்கில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியின் 6ஆவது, 64ஆவது, 66ஆவது, 86ஆவது நிமிடங்களில் முறையே, கரிம் பென்ஸீமா, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரித் பேல், ஜெஸி ஆகியோர் கோல்களைப் பெற்றிருந்தனர்.
இதேவேளை, பார்சிலோனா, வில்லாறியல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. பார்சிலோனா சார்பாக பெறப்பட்ட கோல்களை, போட்டியின் 20ஆவது, 41ஆவது நிமிடங்களில் முறையே இவான் ரக்டிக்கும் சர்ச்சைக்குரிய பெனால்டி மூலம் நேமரும் கோல்களைப் பெற்றனர்.
இந்நிலையில், இவ்வாரப் போட்டிகளின் முடிவில், லா லிகா தொடரின் புள்ளிகள் தரவரிசையில் 76 புள்ளிகளுடன் பார்சிலோனா முதலிடத்திலும் 67 புள்ளிகளுடன் அத்லெட்டிகோ மட்ரிட் இரண்டாமிடத்திலும் 66 புள்ளிகளுடன் றியல் மட்ரிட் மூன்றாமிடத்திலும் உள்ளன.
17 minute ago
21 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
50 minute ago