2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

லிவர்பூல், சிற்றி வெற்றி

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்று வரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில் லிவர்பூல், மன்செஸ்டர் சிற்றி, ஸ்டோக் சிற்றி, சௌத்தாம்டன், சுவான்சீ, டொட்டென்ஹாம், எவர்ற்றன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. தவிர, செல்சி, வட்போர்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் அஸ்டன் வில்லா, வெஸ்ட் ஹாம் அணிகளுக்கிடையிலான போட்டியும் பௌர்ண்மௌத் கிறிஸ்டல் பலஸ் அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இதில், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவர்சைப்பட்டியலில் முதலிடத்தில் காணப்படும் லெய்செஸ்டர் அணியானது, 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியிடம் தோல்வியைத் தழுவியிருந்தது. இப்போட்டியில், பெறப்பட்ட கோலை, மாற்று வீரராகக் களமிறங்கிய கிறிஸ்டியான் பென்டிகி, 63ஆவது நிமிடத்தில் பெற்றிருந்தார்.

அடுத்து, சந்தர்லேண்ட் அணிக்கெதிரான போட்டியில், மன்செஸ்டர் சிற்றி, 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இதில் சிற்றி சார்பாக ரஹீம் ஸ்டேர்லிங், யயா டோரே, வில்பிரைட் போனி, கெவின் டீ புரூன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்தனர். சந்தர்லேண்ட் அணி சார்பாக பெறப்பட்ட கோலை பபியோ பொரினி பெற்றிருந்தார்.

இதேவேளை, மன்செஸ்டர் யுனைட்டெட் அணியானது, 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, தொடர்ச்சியாக தனது நான்காவது தோல்வியை பதிவு செய்து கொண்டது. இப்போட்டியில் பெறப்பட்ட கோல்களை, பொஜன் கிர்கிக்கும் மார்கோ அர்னோடோவிக்கும் பெற்றிருந்தனர்.

அடுத்து, செல்சி, வட்போர்ட் அணிகளுக்கிடையிலான போட்டியில், இரு கோல்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. இப்போட்டியில் செல்சி சார்பாக பெறப்பட்ட இரண்டு கோல்களையும் டியகோ கோஸ்டா பெற்றிருந்தார். வட்போர்ட் அணி சார்பாக ட்ரோய் டீனியும் ஒடியன் இகலோவும் கோல்களைப் பெற்றிருந்தனர்.

இதேவேளை, சௌதாம்டன் அணிக்கெதிராக, 4-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தளுவிய ஆர்சனல் அணியானது, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. சௌதாம்டன் அணி சார்பாக ஷேன் லொங் இரண்டு கோல்களையும் குகோ மார்ட்டினா, ஜோஸ் பொண்டே ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .