Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் இங்கிலாந்து கால்பந்தாட்டப் போட்டிகளில் லிவர்பூல் கால்பந்தாட்டக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. சந்தர்லேண்ட் அணிக்கெதிரான போட்டியிலேயே அவ்வணி வெற்றி பெற்றுள்ளது.
சந்தர்லேண்ட் அணிக்கெதிரான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் கால்பந்தாட்டக் கழகம் வெற்றி பெற்றிருந்தது. கடந்த ஐந்து நாட்களில் இரண்டாவது தடவையாக லிவர்பூல் அணிக்கான வெற்றிக் கோலை கிறிஸ்டியன் பென்டிகியே இப்போட்டியிலும் பெற்றிருந்தார்.
இப்போட்டியில் பெற்ற தோல்வியின் மூலம் பிறீமியர் லீக் போட்டிகளிருந்து வெளியேற்றப்படும் வலயத்துக்கு சந்தர்லேண்ட் சென்றுள்ளது. இதேவேளை மன்செஸ்டர் யுனைட்டெட் கால்பந்தாட்டக் கழகத்துடன் ஆறாவது இடத்தை, லிவர்பூல் கால்பந்தாட்டக் கழகம், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் பகிர்ந்துள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago