Shanmugan Murugavel / 2016 ஜூன் 21 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமின்ட எரங்க, அவருக்கு ஏற்பட்ட இதய உபாதை காரணமாக அயர்லாந்தின் டப்ளினிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வைத்தியசாலையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரது இதயத்துடிப்பு வீதம் மிக அதிகமாகக் காணப்பட்டதையடுத்து, அயர்லாந்து - இலங்கை அணிகளுக்கிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில், ஒரு பந்துக்குத் துடுப்பெடுத்தாடிய எரங்க, களத்தடுப்புத் தயாராகும் போது, இதயத்துடிப்பு, அசாதாரணமாக அதிகரித்ததைத் தொடர்ந்து, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது இதயத்துடிப்பு, நிமிடத்துக்கு 220 தடவைகள் வரை துடித்ததாகப் பதிவுசெய்யப்பட்ட நிலையில், தற்போது அவர், பூரணமாக சாதாரண நிலையை அடைந்துள்ளதாகவும், அதனால் அவர் வீடு திரும்ப முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், இன்று ஆரம்பமாகின்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமிலும் ஷமின்ட எரங்க அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவரது பந்துவீச்சுப் பாணி, விதிமுறைகளுக்கு மாறானது என, சர்வதேச கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஷமின்ட எரங்க, இலங்கைக்குத் திரும்பவுள்ளார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago