2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் செரினா, மரே, பெடரர்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 05 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் எட்டாவது நாளான திங்கட்கிழமை இடம்பெற்ற போட்டிகளில், உலகின் முதல்நிலை வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், உலகின் இரண்டாம் நிலை வீரரான அன்டி மரே, உலகின் மூன்றாம் நிலை வீரரான ரொஜர் பெடரர் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், 7-5, 6-0 என்ற செட் கணக்கில், உலகின் 14ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்ஸ்ஸோவாவைத் தோற்கடித்தும், உலகின் நான்காம்நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், 6-3, 6-1 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மிஸாகி டொய்யை தோற்கடித்தும், உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப், 6-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான மடிஸன் கீஸை தோற்கடித்தும், உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 7-6, 6-4 என்ற செட் கணக்கில் கார்லா சுவாரஸ் நவரோவைத் தோற்கடித்தும் காலிறுதிக்குள் நுழைந்தனர். இந்நிலையில், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான அக்னியஸ்கா ரட்வன்ஸ்கா, 3-6, 7-5, 7-9 என்ற செட் கணக்கில் ஸ்லோவாக்கியாவின் ‌டொமினிக்கா சிபுல்கோவாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்து நான்காவது சுற்றோடு வெளியேறினார்.

இதேவேளை, பிரித்தானியாவின் அன்டி மரே, 7-5, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அவுஸ்திரேலியாவின் நிக் கிறியோஜிஸ்ஸை தோற்கடித்தும், சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜோன்சனை தோற்கடித்தும், உலகின் ஏழாம் நிலை வீரரான மிலோஸ் றாவோனிக், 4-6, 3-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் டேவிட் கொபினைத் தோற்கடித்தும் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில், உலகின் 19ஆம் நிலை வீரரான அவுஸ்திரேலியாவின் பேர்னாட் டொமிக், 4-6, 6-4, 6-3, 4-6, 8-10 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் லூகா பொய்யாவிடம் தோல்வியடைந்து நான்காவது சுற்றுடன் வெளியேறினார்.

இந்நிலையில், உலகின் 10ஆம் நிலை வீரரான பிரான்ஸின் றீஷா கஸ்கே, சக நாட்டவரான ஜூ வில்பிறிட் சொங்காவுடனான நான்காவது சுற்றுப் போட்டியில் 2-4 என முதலாவது செட்டில் பின்தங்கியிருந்தபோது காயம் காரணமாக வெளியேறியதோடு, உலகின் ஆறாம் நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரியும் குரோஷியாவின் மரீன் சிலிச்சுடனான நான்காவது சுற்றுப் போட்டியில் 1-6, 1-5 என பின்தங்கியிருந்தபோது வெளியேறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .