2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

விம்பிள்டன் போட்டிகள்: செரினா, மரே, வவ்றிங்கா வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 29 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் 2ஆம் நாள் போட்டிகளில், உலகின் முதல்நிலை வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், இரண்டாம் நிலை வீரரான அன்டி மரே உள்ளிட்ட முக்கிய வீர, வீராங்கனைகள் வெற்றிபெற்றுள்ளனர்.

சுவிற்ஸர்லாந்தின் அம்ரா சாதிகொவிச்சை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

6ஆம் நிலை வீராங்கனையான இத்தாலியின் றொபேர்ட்ட வின்சி, அமெரிக்காவின் அலிஸன் றிஸ்கேயை 6-2, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

முன்னாள் முதல்நிலை வீராங்கனையும் 45ஆம் நிலையில் உள்ளவருமான டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி, ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்னெற்ஸோவாவிடம் 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

ஆண்களில் உலகில் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரே, தனது சகநாட்டு வீரரான லியம் ப்ரோடியை எதிர்கொண்டு, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

5ஆம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்கா, ஐக்கிய அமெரிக்காவின் டெய்லர் பிறிட்ஸை, 7-6, 6-1, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வெற்றிபெற்றார்.

8ஆம் நிலை வீரரான பிரான்ஸின் றிச்சர்ட் கஸ்கெட், பிரித்தானியாவின் அல்ஜாஸ் பெடேனே, 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .