2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

விம்பிள்டன் போட்டிகள்: ஜோக்கோவிச், பெடரரர், முகுருஸா வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 28 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திங்கட்கிழமை ஆரம்பித்த விம்பிள்டன் டென்னிஸ் சுற்றுத் தொடரின் முதல்நாளில், உலகின் முன்னணி வீர, வீராங்கனைகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில் ஐக்கிய இராச்சியத்தின் ஜேம்ஸ் வார்டை எதிர்கொண்ட சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-0, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, இரண்டாவது சுற்றுக் தகுதிபெற்றார்.

3ஆம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், ஆர்ஜென்டீனாவின் கிடோ பெல்லாவை 7-6, 7-6, 6-3 எனப் போராடி வெற்றிகொண்டார்.

6ஆம் நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரி, அவுஸ்திரேலியாவின் சாம் குரோத்தை, 6-4, 6-3, 7-5 என்ற செட் கணக்கிலும் 7ஆம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் றாவோனிக், ஸ்பெய்னின் பப்லோ கரெனோ பஸ்டோவை 7-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கிலும் வெற்றிகொண்டனர். ஏனையோரில் 11ஆம் நிலை வீரரான டேவிட் கொபின், 14ஆம் நிலை வீரரான டேவிட் பெரர் ஆகியோரும் வெற்றிபெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் போட்டிகளில் 2ஆம் நிலை வீராங்கனையான ஸ்பெய்னின் கார்பைன் முகுருஸா, இத்தாலியின் கமிலா ஜியோர்ஜியை 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டு, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றார். 4ஆம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், ஐக்கிய இராச்சியத்தின் லாரா றொப்ஸனை, 6-2, 6-2 என்ற செட் கணக்கிலும் 5ஆம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப், ஸ்லோவாக்கியாவின் அன்னா கரோலினா ஸ்சிமிட்லோவாவை 6-4, 6-1 என்ற செட் கணக்கிலும் வெற்றிகொண்டனர். ஏனையோரில் 9ஆம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்கவின் மடிஸன் கீய்ஸ், 14ஆம் நிலை வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டொசுர் உள்ளிட்டோரும் வெற்றிபெற்றனர்.

தோல்வியடைந்தோரில், ஆண்களில் 17ஆம் நிலை வீரரான பிரான்ஸின் ஜி. மொன்பில்ஸ், 20ஆம் நிலை வீரரான தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சன், 21ஆம் நிலை வீரரான ஜேர்மனியின் பிலிப் கோல்சிரெய்பெர், உருகுவேயின் 29ஆம் நிலை வீரரான பப்லோ குவஸ் ஆகியோர் தோல்வியடைந்து, முதலாவது சுற்றுடன் வெளியேறினர். பெண்களில் 23ஆம் நிலை வீராங்கனையான சேர்பியாவின் அனா இவானாவிச், 25ஆம் நிலை வீராங்கனையான றோமானியாவின் இரினா கமெலியா பெகு ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .