Shanmugan Murugavel / 2016 ஜூலை 24 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து தேசிய கால்பந்தாட்ட அணியின் முகாமையாளராக, தனது புதிய பதவிக்கு, வீரர்களைக் கையாளும் தனது திறன்கள் முக்கியம் என தான் நம்புவதாக இங்கிலாந்து அணியின் புதிய முகாமையாளராகியுள்ள சாம் அலடைஸ் தெரிவித்துள்ளார்.
ஐந்து, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களை முகாமை செய்திருந்த 61 வயதான அலடைஸ், யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றில், ஐஸ்லாந்துடன் வெளியேற்றப்பட்டமையைத் தொடர்ந்து, பதவி விலகிய றோய் ஹொட்ஜ்சனை கடந்த வெள்ளிக்கிழமை (22) பிரதீயீடு செய்திருந்தார்.
இந்நிலையில், கருத்துத் தெரிவித்த அலடைஸ், தான் சரியான அனுபவத்துடன் சரியாக அனுபவத்தை கொண்டிருப்பதாக நம்புவதாகவும், அணிக்கு பல திறன்களையும் அனுபவத்தையும் தான் வழங்கலாம் என நம்பிக்கையை கொண்டிருப்பதாகவும், மிகுந்த மகிழ்ச்சியான, மிகுந்த வெற்றிகரமாக மாறக் கூடிய குழாமை பெறுவேன் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுவரையில், அலடைஸ், எந்தவொரு பட்டத்தையும் தான் முகாமையாளராகவிருந்த அணிக்குப் பெற்றுக் கொடுத்திருக்காத போதும், தான் முகாமை செய்த அணியை, பிறீமியர் லீக்கிலிருந்து தரமிறக்கப்படுவதிலிருந்து காப்பாற்றியுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் நான்காம் திகதி இடம்பெறவுள்ள ஸ்லோவாக்கியாவுடனான உலகக்கிண்ண தகுதிகாண் போட்டியே, அலடைஸூக்கு முதலாவது போட்டியாக அமையவுள்ளது.
7 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
10 Apr 2026