Shanmugan Murugavel / 2016 ஜூன் 13 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றுவந்த 3ஆவது டெஸ்ட் போட்டி, வெற்றி - தோல்வியின்றி முடிவடைந்தது. இதன்மூலம், அனைத்து அணிகளிலும் முக்கியமான சாதனையொன்றையும் இலங்கை தொடர்ந்து நீடித்துக் கொண்டது.
விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்களுடன் இன்றைய 5ஆவது நாளை இலங்கை ஆரம்பிக்கவிருந்த போதிலும், கடுமையான மழை காரணமாக, இன்று, 12.2 ஓவர்களே வீசப்பட்டன. இலங்கை அணி, ஒரு விக்கெட்டை இழந்து 78 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது, போட்டி முடிவுக்கு வந்தது.
ஸ்கோர்:
இங்கிலாந்து: 416/10 (128.4 ஓவ.) (ஜொனி பெயர்ஸ்டோ ஆ.இ 167, அலஸ்டெயர் குக் 85, கிறிஸ் வோக்ஸ் 66 ஓட். பந்துவீச்சு: ஹேரத் 4, சுரங்க லக்மால் 3, நுவான் பிரதீப் 2 விக்.), 233/7 (71 ஓவ.) (அலெக்ஸ் ஹேல்ஸ் 94, அலஸ்டெயர் குக் ஆ.இ 49 ஓட். பந்துவீச்சு: நுவான் பிரதீப் 3, ஷமின்ட எரங்க 3 விக்.)
இலங்கை: 288/10 (95.1 ஓவ.) (கௌஷால் சில்வா 79, திமுத் கருணாரத்ன 50, குசால் பெரேரா 42 ஓட். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 3, ஸ்டீவன் பின் 3, ஸ்டுவேர்ட் ப்ரோட் 2, ஜேம்ஸ் அன்டர்சன் 2 விக்.), 78/1 (24.2 ஓவ.) (திமுத் கருணாரத்ன ஆ.இ 37 ஓட்.)
போட்டியின் நாயகன்: ஜொனி பெயர்ஸ்டோ
தொடரின் நாயகர்கள்: இங். - ஜொனி பெயர்ஸ்டோ, இல. - கௌஷால் சில்வா.
இந்தப் போட்டி வெற்றி - தோல்வியின்றி முடிவடைந்ததன் மூலம், கிரிக்கெட்டின் தாயகம் என அழைக்கப்படும் லோர்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில், இறுதியாக 25 ஆண்டுகளாக, தோல்வியையே சந்திக்காத சாதனையை, இலங்கை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு, இறுதியாக, 1991ஆம் ஆண்டே, தோல்வியைச் சந்தித்துள்ளது. 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இரண்டில் தோல்வியையும் 8 போட்டிகளை வெற்றி - தோல்வியின்றியும் முடித்துக் கொண்டுள்ளது. ஏனைய அணிகளில் தென்னாபிரிக்க அணி மாத்திரமே, இவ்வாறான சிறப்பான பெறுபேற்றைக் கொண்டுள்ளது. அவ்வணி இறுதியாக, 1960ஆம் ஆண்டே தோல்வியைச் சந்தித்திருந்தது.
இதேவேளை, இந்த டெஸ்ட் தொடரில், புள்ளிகள் முறை பயன்படுத்தப்படுவதால், இந்தப் போட்டியில் கிடைத்த முடிவைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி 10 புள்ளிகளுடனும் இலங்கை அணி 2 புள்ளிகளுடனும் காணப்படுகிறது. இன்னும் 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளும் ஓர் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியும் இடம்பெறவுள்ள நிலையில், அவற்றில் தலா 2 புள்ளிகளைப் பெற முடியும். இதன்படி, இத்தொடரை இலங்கை வெல்வதற்கு, மீதமுள்ள போட்டிகள் அனைத்தையும் வெல்ல வேண்டும். மாறாக, 5 போட்டிகளில் வென்றால், தொடரைச் சமநிலைப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago