Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வில்லாரியல் அணியிடம் தோல்வியைத் தளுவியதையடுத்து ரியல் மட்ரிட் அணியானது, ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெறும் லா லிகா தொடரின் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தை வகிக்கும் பார்சிலோனாவையும் அட்லெட்டிகோ மட்ரிட்டையும் விட ஐந்து புள்ளிகள் பின் தங்கியுள்ளது.
ரியல் மட்ரிட்டுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13), இடம்பெற்ற போட்டியில் வில்லாரியல் அணியானது 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டியின் ஆரம்பத்தில் எட்டாவது நிமிடத்தில் ரியல் மட்ரிட்டின் லூகா மொட்ரிக் பந்தை இழந்தபோது, பந்தைப் பெற்ற வில்லாரியல் அணியின் செட்ரிக் பகம்பு, ரொபேர்ட்டோ சொல்டாடோவிடம் பந்தை அனுப்ப, அதை அவர், ரியல் மட்ரிட் அணியின் கோல்காப்பாளர் கெய்லர் நவாசினுடைய கால்களினூடாக கோலாக்கினார். அந்தக் கோலே, பின்னர் வில்லாரியல் அணியின் வெற்றிக் கோலாகியது.
போட்டியின் ஆரம்பத்தில் வில்லாரியல் அணியானது ஆதிக்கம் செலுத்தியிருந்தபோதும் போட்டியின் இரண்டாவது பகுதியில் ரியல் மட்ரிட் அணியானது தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் பெறுவதற்காக 20 உதைகளை அடித்தபோதும் ஒன்று மட்டுமே கோல்காப்பாளரினால் தடுக்கப்படுவதாக அமைந்தது. ரியல் மட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோவினால் இரண்டாவது பாதியில் அடிக்கப்பட்ட பந்து ஒன்று வெளிக் கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியிருந்தது.
19 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
7 hours ago