Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் தலைவர் வெய்ன் றூணி, வெஸ்ட் ஹாம் அணிக்கெதிராக இடம்பெறவுள்ள போட்டியில் பங்குபற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முழங்கால் உபாதைக்குள்ளாகியுள்ள அவர், அதிலிருந்து மீண்டுவரும் நிலையிலேயே இந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இறுதியாக, கடந்த பெப்ரவரி 13ஆம் திகதியன்று விளையாடிய வெய்ன் றூணி, அதனைத் தொடர்ந்து முழங்கால் உபாதை காரணமாக விளையாடியிருக்கவில்லை.
இந்நிலையில், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் 21 வயதுக்குட்பட்ட போட்டியில், வெய்ன் றூணி பங்கேற்றிருந்தார். மிடில்ஸ்புரோ 21 வயதுக்குட்பட்டோர் அணிக்கெதிரான போட்டியிலேயே வெய்ன் றூணி பங்கேற்றிருந்தார். இப்போட்டியில் அவர், 60 நிமிடங்கள் விளையாடியிருந்தார்.
இப்போட்டியில் பங்குபற்றியதைத் தொடர்ந்தே, முக்கியமான எப்.ஏ கிண்ணப் போட்டியான வெஸ்ட் ஹாம் அணிக்கெதிரான காலிறுதிப் போட்டியில், வெய்ன் றூணி பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
15 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
1 hours ago