Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் மும்பை வெங்கடே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணியின் வெற்றி இலக்காக 540 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து அணி, 3ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் டார்லி மிச்சேல் 60, ஹென்றி நிக்கொலஸ் 36 (ஆட்டமிழக்காமல்) ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 3, அக்ஷார் பட்டேல் 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் மயங் அகர்வால் 150, அக்ஷார் பட்டேல் 52 ஓட்டங்களைப் பெற்றதுடன், நியூசிலாந்தின் அஜாஸ் பட்டேல் 119 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதேவேளை, தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 62 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
நியூசிலாந்து துடுப்பாட்டத்தில் கைல் ஜெமீசன் 17, டொம் லதம் 10 ஓட்டங்களையும் பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 4, மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 7 விக்கெட்டுகளை இழந்து 276 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தில், மயங் அகர்வால் 62, சட்டேஸ்வர் புஜாரா, சுப்மன் கில் ஆகியோர் தலா 47 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்து வீச்சில் அஜாஸ் பட்டேல் 4, ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு நியூசிலாந்து அணி 400 ஓட்டங்களைப் பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago