Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜனவரி 28 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியில் வலென்சியாவை றியல் மட்ரிட் வென்றது.
இப்போட்டியில், வலென்சியாவின் பெனால்டி பகுதிக்குள் விதிமுறைகளை மீறி கிறிஸ்டியானோ ரொனால்டோ கையாளப்பட போட்டியின் 16ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனால்டியை கோலாக்கி றியல் மட்ரிட்டுக்கு முன்னிலையை வழங்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா விதிமுறைகளை மீறி கையாளப்பட போட்டியின் 38 ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனால்டியையும் கோலாக்கி றியல் மட்ரிட்டின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.
தொடர்ந்து, போட்டியின் 58ஆவது நிமிடத்தில் வலென்சியாவின் சன்டி மினா கோலொன்றைப் பெற்று கோல் வித்தியாசத்தை ஒன்றாகக் குறைத்தபோதும் போட்டியின் 84ஆவது, 89ஆவது நிமிடங்களில் மார்ஷெல்லோ, டொனி க்ரூஸ் ஆகியோர் பெற்ற கோல்களின் காரணமாக, போட்டி முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago