Mayu / 2026 மே 05 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐபிஎல் 2026 தொடரின் 47-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் சிக்சர் மழையைப் பொழிந்து மைதானத்தை அதிரவைத்தார்.
வெறும் 16 பந்துகளில் அரைசதம் கடந்து நடப்புத் தொடரின் அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார். 21 பந்துகளில் 63 ஓட்டங்கள் எடுத்த அவர், தனது இன்னிங்ஸில் 8 பிரம்மாண்ட சிக்சர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார்.மும்பை வான்கடே மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைப் பறக்கவிட்ட பூரன், குறிப்பாக ‘லெக் சைடு’ திசையில் அதிக சிக்சர்களை அடித்து மும்பை பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார்.
இந்த அதிரடியின் மூலம் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 228 ஓட்டங்கள் குவித்தது.
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago