Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 05 , பி.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமில் இடம்பெற்றிருந்த ஒன்பது வீரர்கள் இந்தியாவுக்கு பயணமாகுவதற்காக கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்றிரவு சென்றபோது திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான அணித்தலைவராக நியமிக்கப்பட்ட திஸர பெரேரா மற்றும் உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, அசேல குணரட்ன, சத்துரங்க டி சில்வா, சச்சித் பத்திரன, துஷ்மந்த சமீர, நுவான் பிரதீப், அகில தனஞ்சய ஆகியோரே இவ்வாறு விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் அனுமதியில்லாமை காரணமாகவே இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த 9 வீரர்களும் இந்தியா செல்வதற்கான அனுமதியை இன்று மாலை தயாசிறி ஜயசேகர வழங்கியிருந்தார்.
குழாம்: திஸர பெரேரா (அணித்தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல, சதீர சமரவிக்கிரம, லஹிரு திரிமான்ன, அஞ்சலோ மத்தியூஸ், அசேல குணரட்ன, சத்துரங்க டி சில்வா, சச்சித் பத்திரண, அகில தனஞ்சய, ஜெப்ரி வன்டர்சே, துஷ்மந்த சமீர, சுரங்க லக்மால், நுவான் பிரதீப்.
இலங்கையின் விளையாட்டு விதியின்படி, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து விளையாட்டு அணிகளுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி தேவையென்ற நிலையில், வழமையாகத் தேர்தெடுக்கப்படுகின்ற அனைத்துக் குழாம்களும் விளையாட்டுத்துறை அமைச்சரால் அனுமதிக்கப்பட்டிருந்தன. எனினும் அண்மைய காலங்களில் ஆகக்குறைந்த உடற்றகுதி மட்டங்களை கிரிக்கெட் அணிகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு விதித்திருந்தது.
இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், ரங்கன ஹேரத் காயமடைய அவருக்குப் பதிலாக மலிந்த புஷ்பகுமார தெரிவு செய்யப்பட்டபோதும் உடற்றகுதிச் சோதனையில் அவர் தோல்வியடைந்தமை காரணமாக விளையாட்டுத்துறை அமைச்சு அவரின் தேர்வை அனுமதிக்கவில்லை.
2 hours ago
2 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
19 Jul 2025