Shanmugan Murugavel / 2021 ஜூன் 29 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் நேற்று ஆரம்பமான விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து, அன்றைய முதல் நாளிலேயே உலகின் நான்காம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ், 10ஆம் நிலை வீராங்கனையான பெற்றா குவித்தோவா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் பிரான்ஸிஸ் தியஃபோவை எதிர்கொண்ட கிரேக்கத்தின் சிட்டிபாஸ், 4-6, 4-6, 3-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.
இந்நிலையில், தனது முதலாவது சுற்றுப் போட்டியில், ஐ. அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீவன்ஸை எதிர்கொண்ட செக் குடியரசின் குவித்தோவா, 3-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026