Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 26 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பார்படோஸில் இலங்கை நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த மூன்றாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி வெற்றிபெறுவதற்கு 63 ஓட்டங்கள் தேவையாகவுள்ளது.
தமது முதலாவது இனிங்ஸில், 5 விக்கெட் இழப்பு 99 ஓட்டங்களைப் பெற்றவாறு இன்றைய மூன்றாம் நாளை ஆரம்பித்த இலங்கை, 154 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், நிரோஷன் டிக்வெல்ல 42, தனுஷ்க குணதிலக 29 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 4, ஷனொன் கப்ரியல் 3, கேமார் றோச் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 93 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், கேமார் றோச் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், கசுன் ராஜித, சுரங்க லக்மால் ஆகியோர் தலா 3, லஹிரு குமார 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து, 144 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை, இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், குசல் மென்டிஸ் 25, டில்ருவான் பெரேரா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதுள்ளனர். பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது இனிங்ஸின் 29ஆவது ஓவரில் பிடியெடுப்பொன்றை எடுக்க முயன்ற குசல் பெரேரா, விளம்பரப் பலகைகளுடன் மோதி விழுந்த நிலையில், அவருக்கு மோசமான காயமெதுவும் இல்லை என இலங்கையணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago