Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 06 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஜேர்மனியக் கிண்ணத் தொடரிலிருந்து பொரூசியா டொட்டமுண்ட், ஆர்.பி லெய்ப்ஸிக் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன.
வேடர் பிளீமனின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து பொரூசியா டொட்டமுண்ட் வெளியேற்றப்பட்டிருந்தது.
பொரூசியா டொட்டமுண்ட் சார்பாக எர்லிங் பிறோட் ஹலான்ட், ஜியோவனி றெய்னா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், வேடர் பிளீமன் சார்பாக, டேவி செல்கே, லியனார்டோ பிட்டென்கோர்ட், மிலொட் றஷிகா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.
இதேவேளை, ஐன்ரச்ட் பிராங்பேர்ட்டின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே இத்தொடரிலிருந்து ஆர்.பி லெய்ப்ஸிக் வெளியேறிருந்தது.
ஐன்ரச்ட் பிராங்பேர்ட் சார்பாக, பிலிப் கொஸ்டிச் இரண்டு கோல்களையும், அன்ட்ரே சில்வா ஒரு கோலையும் பெற்றிருந்தனர். ஆர்.பி லெய்ப்ஸிக் சார்பாகப் பெறப்பட்ட கோலை டனி ஒல்மோ பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago