Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மார்ச் 14 , பி.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டது.
தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றின் இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லாவிடம் தோற்றதைத் தொடர்ந்தே சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது.
செவில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய முதலாவது சுற்றுப் போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாமல் 0-0 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்த நிலையில், இரண்டாவது சுற்றுப் போட்டியின் முதற்பாதியிலும் கோலெதுவும் பெறப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில், போட்டியின் 72ஆவது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய செவில்லாவின் விஸாம் பென் யெடர் தான் களமிறங்கிய இரண்டாவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்று தனது அணிக்கு முன்னிலையை வழங்கியதுடன், அடுத்த நான்காவது நிமிடத்தில் தலையால் முட்டி மேலுமொரு கோலைப் பெற்று செவில்லாவின் முன்னிலையை விஸாம் பென் யெடர் இரட்டிப்பாக்கினார்.
தொடர்ந்து போட்டியின் 84ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் றொமேலு லுக்காக்கு கோலொன்றைப் பெற்றபோதும் அதன்பிறகு கோலெதுவும் பெறப்பட்டிருக்காத நிலையில், போட்டி முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற செவில்லா, 2-1 என்ற மொத்த கோல் கணக்கில் சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு முன்னேற, மன்செஸ்டர் யுனைட்டெட் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
இதேவேளை, உக்ரேனியக் கழகமான ஷக்தார் டொனெஸ்டெக்கின் மைதானத்தில் இடம்பெற்ற அவ்வணியுடனான காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதலாவது சுற்றில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இத்தாலிய சீரி ஏ கழகமான றோமா தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 2-2 என்ற மொத்த கோல் கணக்கை அடைந்த நிலையில், ஷக்தார் டொனெஸ்டெக்கின் மைதானத்தில் பெற்ற கோல் காரணமாக சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025