Mayu / 2023 டிசெம்பர் 25 , பி.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், வெஸ்ட் ஹாம்
யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான
போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.
வெஸ்ட் ஹாம் சார்பாக, ஜரோட் பெளவன், மொஹமட் கூடூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு
கோலைப் பெற்றனர்.
இதேவேளை லிவர்பூலின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற
கோல் கணக்கில் ஆர்சனல் சமப்படுத்தியது. ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை கப்ரியல்
பெற்றதோடு, லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றார்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியை 2-1 என்ற
கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றது. டொட்டென்ஹாம் சார்பாக,
றிஷலிஷன், சண் ஹெயுங்-மின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். எவெர்ற்றன்
சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரே கோமஸ் பெற்றிருந்தார்.

4 hours ago
9 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
04 Apr 2026