2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெஸ்ட் ஹாமிடம் தோற்ற லிவர்பூல்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 09 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் தோற்றது.

லிவர்பூல் சார்பாக, ட்ரென்ட் அலெக்ஸான்டர்-அர்னோல்ட், டிவோக் ஒரிஜி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வெஸ்ட் ஹாம் சார்பாக, பப்லோ பொர்னல்ஸ், கேர்ட் ஸூமா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது.

இதேவேளை, எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சமப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், லீட்ஸ் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி சமப்படுத்தியிருந்தது. லீட்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை றபின்ஹா பெற்றதோடு, லெய்செஸ்டர் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹார்வி பார்ண்ஸ் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .