2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஷக்தார் டொனெஸ்டெக்கிடம் தோற்றது றியல் மட்ரிட்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 22 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில் குழுநிலைப் போட்டிகளில், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் நேற்று  இரவு நடைபெற்ற அவ்வணிக்கும், உக்ரேனியக் கழகமான ஷக்தார் டொனெஸ்டெக்குமிடையிலான குழு பி போட்டி ஒன்றில் 2-3 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் தோற்றது.

றியல் மட்ரிட் சார்பாக, லூகா மோட்ரிட்ச், வின்ஷியஸ் ஜூனியர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஷக்தார் டொனெஸ்டெக் சார்பாக, டெடே, மனோர் சொலமன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில், நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச்சின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுக்குமிடையிலான குழு ஏ போட்டியொன்றில் 4-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் வென்றது. பயேர்ண் மியூனிச் சார்பாக, கிங்ஸ்லி கோமன் இரண்டு கோல்களையும், லியோன் கொரெட்ஸ்கா, கொரென்டின் டொலிஸோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனின் மைதானத்தில் அவ்வணிக்கும் இன்னொரு ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா மொச்சென்கிளெட்பாவுக்குமிடையிலான குழு பி போட்டியொன்றானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் றொமெலு லுக்காக்கு பெற்றதோடு, பொரூசியா மொச்சென்கிளெட்பா சார்பாக, றமி பென்செபைனி, ஜொனாஸ் ஹொஃப்மன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X