Shanmugan Murugavel / 2021 மே 23 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்காக பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கைக் குழாமில் இடம்பெற்றுள்ள அறிமுக வேகப்பந்துவீச்சாளர் ஷிரான் பெர்ணான்டோவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷிரான் பெர்ணான்டோ எவ்விதக் குணங்குறிகளையும் காண்பிக்கவில்லையென அறியப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இலங்கையணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளர் சமிந்த வாஸ், வேகப்பந்துவீச்சாளர் இசுரு உதானவும் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியதாக காண்பிக்கப்பட்ட நிலையில், நேற்று சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இவர்களுக்கு கொவிட்-19 தொற்று இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
6 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Apr 2026