Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜனவரி 28 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், ஷெஃபீல்ட் யுனைட்டெட்டுக்கும் இடையிலான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோல்வியடைந்தது.
ஷெஃபீல்ட் யுனைட்டெட் சார்பாக, கீன் பிறயான், ஒலிவியர் புர்கே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹரி மக்குவாயா பெற்றிருந்தார்.
இதேவேளை, எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், லெய்செஸ்டர் சிற்றிக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேம்ஸ் றொட்றிகாஸ் பெற்றிருந்ததோடு, லெய்செஸ்டர் சார்பாகப் பெறப்பட்ட கோலை யூரி டெலிமான்ஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில், செல்சியின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago