Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளில், ஸ்கொட்லாந்து, அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
ஸ்கொட்லாந்து அணிக்கும் சமோவா அணிக்குமிடையிலான போட்டியில், ஸ்கொட்லாந்து அணி 36-33 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, காலிறுதிக்கான தங்களது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டது.
இப்போட்டியின் முதற்பாதி முடிவில் 23-26 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்த ஸ்கொட்லாந்து, இரண்டாவது பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றிபெற்றது.
அவுஸ்திரேலிய, வேல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 15-6 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் காணப்பட்ட அவுஸ்திரேலிய அணி, முதற்பாதி முடிவில் 9-6 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்ததோடு, இரண்டாவது பாதியில் மேலதிகமாக 6 புள்ளிகளைப் பெற்று, வெற்றிபெற்றது.
இங்கிலாந்து, உருகுவே அணிகளுக்கிடையிலான போட்டியில், இங்கிலாந்து அணி 60-3 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. தொடரிலிருந்து ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுள்ள இங்கிலாந்து அணி, இதன்மூலம், வெற்றியுடன் இத்தொடரை முடிவுசெய்தது.
உருகுவே அணியால் பெறப்பட்ட 3 புள்ளிகள், போட்டியில் முதலாவதாகப் பெறப்பட்ட புள்ளிகள் என்பதோடு, அதன் பின்னர் முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, 60 தொடர்ச்சியான புள்ளிகளைப் பெற்று, வெற்றிபெற்றது.
57 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
7 hours ago