2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஸ்கொட்லாந்திடம் தோற்ற டென்மார்க்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 16 , பி.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் குழு எஃப் தகுதிகாண் போட்டிகளில், ஸ்கொட்லாந்தில் இன்று அதிகாலை நடைபெற்ற டென்மார்க்குடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்கொட்லாந்து வென்றது.

ஸ்கொட்லாந்து சார்பாக, ஜோன் ஸுட்டர், சே அடம்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, போலந்தில் நடைபெற்ற ஹங்கேரியுடனான குழு ஐ போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் போலந்து தோற்றது. போலந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை கரோல் ஸிவிடெர்ஸ்கி பெற்றதுடன், ஹங்கேரி சார்பாக, அன்ட்ராஸ் ஸ்காஃபர், டேனியல் கஸ்டக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

அந்தவகையில், உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறுவதற்கு தகுதிப் போட்டியில் போலந்து விளையாட வேண்டியுள்ளது.

இந்நிலையில், வட அயர்லாந்தில் நடைபெற்ற இத்தாலியுடனான குழு சி போட்டியை 0-0 என்றவாறு வட அயர்லாந்து சமப்படுத்திய நிலையில், உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறுவதற்கு தகுதிப் போட்டியில் இத்தாலி விளையாட வேண்டியுள்ளது.

இதேவேளை, சுவிற்ஸர்லாந்தில் நடைபெற்ற பல்கேரியாவுடனான குழு சி போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்ற சுவிற்ஸர்லாந்து, உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது. சுவிற்ஸர்லாந்து சார்பாக, நோவா ஒகஃபோர், ருபென் வர்காஸ், செட்றிக் இட்டென், றெமோ புரூலர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில் சான் மரினோவில் நடைபெற்ற குழு ஐ போட்டியில் 10-0 என்ற கோல் கணக்கில் அவ்வணியை இங்கிலாந்து வென்று உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது. ஹரி கேன் நான்கு கோல்களையும், ஹரி மக்குவாயா, டைரோன் மிங்ஸ், எமிலி ஸ்மித் றோவே, தம்மி ஏப்ரஹாம், புகயோ ஸாகா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X