Editorial / 2018 மே 28 , பி.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டாவது டெஸ்டுக்கான இங்கிலாந்துக் குழாமிலிருந்து மார்க் ஸ்டோன்மன் நீக்கப்பட்டுள்ளார்.
தான் விளையாடிய 11 டெஸ்ட்களில், அதிகபட்சமான 60 ஓட்டங்கள் உள்ளடங்கலாக ஐந்து அரைச்சதங்களைப் பெற்றிருந்த மார்க் ஸ்டோன்மன், பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பிரகாசிக்காமையையடுத்தே குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மார்க் ஸ்டோன்மன்னை கீட்டன் ஜெனிங்ஸ் இரண்டாவது டெஸ்டுக்கான குழாமில் பிரதியீடு செய்கிறார். கவுண்டி போட்டிகளில் தனது இறுதி ஏழு இனிங்ஸ்களில் மூன்று சதங்களை கீட்டன் ஜெனிங்ஸ் பெற்றிருந்தார்.
இரண்டாவது டெஸ்டுக்கான அணியில், கீட்டன் ஜெனிங்ஸ் இடம்பெறுவது நிச்சயமாகியுள்ள நிலையில், முதலாவது டெஸ்டில் அவ்வளவாக பிரகாசித்திருக்காத மார்க் வூட், கிறிஸ் வோக்ஸால் பிரதியீடு செய்யப்படும் நிலையும் காணப்படுகிறது.
குழாம்: அலிஸ்டயர் குக், கீட்டன் ஜெனிங்ஸ், ஜோ றூட் (அணித்தலைவர்), டேவிட் மலன், ஜொனி பெயார்ஸ்டோ (விக்கெட் காப்பாளர்), பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லர், டொம் பெஸ், மார்க் வூட், ஸ்டூவர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன், கிறிஸ் வோக்ஸ்.
5 minute ago
12 minute ago
47 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
47 minute ago
58 minute ago