Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி, இலங்கை நேரப்படி நாளை அதிகாலை ஆரம்பிக்கவுள்ள நிலையில், போட்டிக்கு முன்னதாகக் கருத்துத் தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், ஹமில்டன் ஆடுகளத்தால் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களும் பயனடைவர் எனத் தெரிவித்தார்.
ஹமில்டன் ஆடுகளம், வழமைக்கு மாறாக, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவியளிக்கும் வண்ணம் தயார்செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவக்கூடாது என்ற காரணத்தினாலேயே இவ்வாறு தயார் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த மத்தியூஸ், வேகப்பந்து வீச்சுக்கு அதிகமாக உதவக்கூடிய ஆடுகளமாக இருப்பதால், இரு அணிகளுக்கும் சமனான சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெறும் எனத் தெரிவித்தார். துடுப்பெடுத்தாடும் போதோ அல்லது பந்துவீசும் போதோ, சிறப்பான ஆரம்பமொன்றை எடுப்பது முக்கியமானது எனத் தெரிவித்த அவர், வெற்றியை நோக்காகக் கொண்டே இலங்கை விளையாடுமெனத் தெரிவித்தார்.
இத்தொடரின் முதற்போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இப்போட்டியை வெற்றிபெறுவதற்காக விளையாடித் தோல்வியடைந்தாலும், 0-2 என்ற கணக்கில் இத்தொடரைத் தோல்வியடைவதில் பிரச்சினையில்லை என மத்தியூஸ் குறிப்பிட்டார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago