2026 மே 04, திங்கட்கிழமை

சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் புதிய மாணவர்களுக்கான விரிவுரைகள் மே 2ஆம் திகதி ஆரம்பம்

Super User   / 2013 ஏப்ரல் 28 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட புதிய மாணவர்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் மே 2ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக  சிரேஸ்ட உதவி பதிவாளர் (பரீட்சைகள்) தெரிவித்தார்.

சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான  பீடத்தில் மருத்துவ மற்றும் தாதியியல் ஆகிய கற்கைகளுக்கான விரிவுரைகளே இடம்பெறுகின்றன.

இதேவேளை, விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் மே மாதம் 1ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு முன்னர் இலக்கம் 50, புதிய கல்முனை வீதியிலுள்ள சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு சமூகமளிக்கும் படியும் சிரேஸ்ட உதவி பதிவாளர் வேண்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .