2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கிழக்கு மாகாண கலாசார கண்காட்சி பெப்ரவரி 1ஆம் திகதி ஆரம்பம்

Super User   / 2013 ஜனவரி 23 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

கிழக்கு மாகாண கலாசார கண்காட்சி எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் தொடர்ந்து 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இந்த தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு மாத்திரம் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த கலாசர கண்காட்சியில் இலங்கை முஸ்லிம்களின் தொன்மை, வரலாறு, வாழ்வியல், மற்றும் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் பல்வேறு விடயங்கள்  காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் முஸ்லிம்களின் கலை, பாரம்பரியம், வரலாற்று அம்சங்களை அரங்கேற்றும் நிகழ்வகள் ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .