2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மட்டு. மாவட்டத்தில் மதுவுக்கு மாதாந்தம் 200 மில்லியன்: சார்ள்ஸ்

Kanagaraj   / 2014 ஜூன் 24 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதாந்தம் 200 மில்லியன் ரூபாவுக்கு மது விற்பனையாவதாகவும் மாவட்டத்தில் குடிபோதைக்கு மிகப்பெரிய தொகை செலவிடப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவத்தார்.

மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற மகளிர் மகா சங்க சம்மேளனத்தில் பேசும்போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து  உரையாற்றிய அவர்,
நான் இந்த மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக கடமையேற்ற போது 54 மதுபான சாலைகள் இருந்தன. அதன் பின்னர் ஒரு மதுபான சாலையும் புதிதாக திறக்கப்படவில்லை. அதற்கான அனுமதியை நான் வழங்கவில்லை.

ஆனால,; மதுபான சாலைகளை மூடுதற்கான உத்தரவை என்னால் பிறப்பிக்க முடியாது. அதை மதுவரி அதிகாரிகள்தான் செய்யவேண்டும். ஆனால் இம்மாவட்ட பெண்கள் அதற்தெகதிரான போராடவேண்டும் என தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .