2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 8பேர் உயிரிழப்பு: இன்பராஜன்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

கடந்த வாரம் முதல் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பணிப்பாளர் இன்பராஜன் தெரிவித்தார்.

இதில் கோரளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 3 பேரும், ஏறாவூர்பற்றில் இருவரும், மண்முனை மேற்கு - வவுணதீவில் ஒருவரும், மண்முனைப்பற்று - ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 273 கிராம சேவையாளர் பிரிவுகளில் இதுவரை 61,863 குடும்பங்களைச் சேர்ந்த 229,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது 88 குடும்பங்களைச் சேர்ந்த 347 பேர் மாத்திரம் இரண்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இன்பராஜன் தெரிவித்தார்.

இவ் முகாம்கள், வாழைச்சேனை மற்றும் ஏறாவூர்பற்று  பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடுவிலும் உள்ளன.

வெள்ளத்தினால் 2,112 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. அத்துடன் 3,426 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. ஏறாவூர் பற்றில் அதிகமாக வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X