2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. மாவட்டத்தில் 14 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிற்காக 25 பேர் போட்டி

Super User   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எஸ்.வதனகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 25 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் மே 4ஆம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியுடன் முடிவுற்றுள்ளது. இந்நிலையில் 14 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கு 25 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர் விவகார அமைச்சினால்  நடைமுறைப்படுத்தும் இளைஞர் நாடாளுமன்தத்தின் இரண்டாவது அவைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் காலம் கடந்த 20ஆம் திகதி முதல் இன்று வரை வழங்கப்பட்டிருந்து.

எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றே அனைவரும் வேட்பு மனுக்களை தத்தம் பிரதேச செயலகங்களிலும் கையளித்தனர்.  இந்த தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில 27 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். எனினும் ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒரு  வேட்புமனு வீதம் இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 25 பேர் போட்டியிடவுள்ளனர்.

அத்துடன் எட்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒருவர் மாத்திரம் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .