2026 மே 04, திங்கட்கிழமை

'மட்டு. மாவட்டத்தில் 28 வகையான மீனினங்கள் அருகி வருகின்றன'

Super User   / 2013 ஏப்ரல் 29 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன், ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 வகையான மீன் இனங்கள் அருகி வருகின்றன என கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.ரி.ஜோர்ஜ் தெரிவித்தார்.

மாவட்டத்திலுள்ள வாவிகளில் 112 வகையான மீனினங்கள் உண்டு. இவைகளில் 28 வகையான மீனினங்களே அருகி வருகின்றன என அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு கடற்றொழில் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மீனவர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,

"மட்டக்களப்பு வாவிகளில் ஒட்டி, செல்வன், கிழக்கன், சல்லள் போன்ற மீனினங்கள் உற்பத்திகள் குறைந்து செல்கின்றன. மாவட்டத்தில் வாவிகளை நம்பி 11,500 மீனவ குடும்பங்களும் கடலை நம்பி 12,500 குடும்பங்களும் உள்ளன. இது இந்த குடும்பங்களின் வாழ்வாதாரமாகும்.

கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 100 தோணிகள் மாத்திரமே காணப்பட்டன. ஆனால் இன்று 800 தோனிகளுக்கு மேல் காணப்படுகின்றன. கடல் வளத்தையும் வாவியையும் நாம் பாதுகாக்க வேண்டும். அது நமது பெரிய வளமாகும். சட்டவிரோதமாக மீன் பிடிப்பதன் மூலம் எமது கடலிலும் வாவியிலும் மீன்கள் அருகிப்போகும் நிலை உருவாகியுள்ளன.

சட்டவிரோதமான மீன்பிடிகளை தடுப்பதற்கு நாம் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். எமது உத்தியோகத்தர்கள் களத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோரக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் சட்டவிரோத மீன்பிடி வலைகள் அதன் உபகரணங்களையும் கைப்பற்றி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 107 பேருக்கு எதிராக சட்ட விரோத மீன்பிடி தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடல் சட்டத்தையும் அதன் ஒழுங்கையும் மதித்து நாம் மீன்பிடிகளில் ஈடுபட வேண்டும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .