2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு காய்ச்சலால் 9 வயது சிறுமி மரணம்

Kogilavani   / 2014 மார்ச் 20 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

டெங்கு காய்ச்சல் காரணாமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பாத்திமா சம்ஹா என்ற 9 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை(20) உயிரிழந்துள்ளதாக  காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி பிர்தௌஸ் நகரைச் சேர்ந்த மேற்படி சிறுமி காய்ச்சல் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு  அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி காத்தான்குடி பிர்தௌஸ் பாடசாலையில் தரம் 3இல் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இம் மாணவியின் வீடு, சுற்றுச்சூழல் மற்றும் பாடசாலை என்பன பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X