2026 மே 14, வியாழக்கிழமை

dd

100 வறிய குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புக்கான அனுமதி

Super User   / 2013 ஜூலை 08 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர், சதாம் ஹுஸைன் கிராமத்திலுள்ள 100 குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புக்கான அனுமதி வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளிலிருந்து 100 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குழாய் நீர் இணைப்பை பெறுவதற்கான அனுமதிக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

குழாய் நீர் இணைப்புக்குச் செலவாகும் பணத்தை கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் அஹமட் வழங்குவதற்கு முன் வந்து இந்த அனுமதிக் கடிதங்களை இன்று பயனாளிக் குடும்பங்களிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஸா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .