2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மட்டு. மாவட்ட அபிவிருத்திக்கு 10,008.11 பில்லியன் ரூபா நிதியொதுக்கீடு

Super User   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு 10,008.11 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

இதில் கிழக்கு மாகாண சபையிலிருந்து 2,461.21 மில்லியன் ரூபாவும் மத்திய அரசாங்கத்திலிருந்து விசேட திட்டங்களுக்காக 2,234.10 மில்லியன் ரூபாவும் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் 1,679.94 மில்லியன் ரூபாவும் மத்திய அரசாங்கத்தின் அமைச்சுக்களில் இருந்து 1,541.92 மில்லியன் ரூபாவும் இந்திய வீடமைப்பு திட்டத்திற்காக 1,100 மில்லியன் ரூபாவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 940.94 மில்லியன் ரூபாவும் தேசத்திற்கு மகுடம் தகவல் தொழிநுட்பகூட நிர்மாணத்திற்காக 30 மில்லியன் ரூபாவும், மீள்குடியேற்ற அமைச்சு 20 மில்லியன் ரூபாவை நிதியொதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதியின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X